சவுதி அறிமுகம் செய்த 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் அறியாமல் இந்த புதிய வகையான விசாவுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்
Image : Saudi Arabia City
சவுதியின் 96 மணிநேர விசா பெற நிபந்தனைகள் பின்வருமாறு
சவுதி வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை முதல் 96 மணிநேர " உங்கள் டிக்கெட் உங்கள் விசா" என்ற 4 நாட்கள் Validity உள்ள Transit விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது அனைவரும் அறிந்ததே. இதை எப்படி பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை
இங்கே பார்க்கலாம்:
இந்தியா, இலங்கை உள்ளிட்ட சவுதியுடன் வெளியுறவு வைத்துள்ள உலகின் எந்த நாட்டினராக இருந்தாலும், எங்கு வசிக்கின்ற நபர்களாக இருந்தாலும் இந்த விசாவை பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள்.
இந்த Transit Visa-வை நீங்கள் சவுதி ஏர்லைன்ஸ் மற்றும் ஃப்ளைனாஸ் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் உங்கள் டிக்கெட்களை முன் பதிவு செய்யும்போது ட்ரான்சிட் விசாவிற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். இதற்கான முழு பணத்தையும் இந்த நேரத்தில் செலுத்த வேண்டியது இருக்கும்.
விசா பெற முயற்சிக்கும் நபர் இந்த தளங்களில் விமான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது Multiple City Option-ஐ தேர்வு செய்து இந்த இலவச விசா பெறுவதற்காக உங்கள் புகைப்படம் மற்றும் சில விபரங்கள் பதிவேற்றியவுடன் நீங்கள் பதிவு செய்கின்ற உங்களுடைய Mail ஐடிக்கு 3 நிமிடங்களில் விசா வந்து சேரும்.
இப்படி பெறுகின்ற விசாவின் அதிகபட்சமாக செல்லுபடியாகும் நாட்கள் 90 தினங்கள் மட்டுமே. இந்த 90 நாட்களுக்குள் இதை நீங்கள் பயன்படுத்த வேண்டும். சவுதியில் நுழைந்த பிறகு அதிகபட்சமாக 4 நாட்கள்( 96 மணிநேரம்) அங்கு தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும். அதன் பிறகு நீங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
இந்த நான்கு நாட்களில் உம்ரா செய்வது அல்லது சவுதியின் எந்த இடத்திற்கும் செல்லலாம் சுற்றி பாக்கலாம், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம், உங்கள் உறவினர்கள் அங்கு இருந்தால் அவர்களை சென்று சந்திக்கலாம் இப்படி எது வேண்டுமானாலும் செய்யலாம். உம்ரா செய்ய விரும்பும் நபர்கள் அதற்கான செயலி வழியாக விண்ணப்பித்து கூடுதலாக அனுமதி பெற வேண்டும்.
இந்த புதிய விசா பெறுவதற்கான நிபந்தனைகள் பின்வருமாறு:
Transit என்ன என்பது தெரியாத நபர்களுக்கு இந்த ஒரு வரி விளக்கம். எடுத்துகாட்டாக நீங்கள் துபாயில் இருந்து இந்தியா வருகின்ற நபர் என்று வைத்து கொள்ளுங்கள். பலர் பயணச்சீட்டு அதிக விலையாக இருக்கும் பட்சத்தில் நேரடியான விமானங்கள் பயன் படுத்தி இந்தியா வருவதில்லை. மாறாக இடையில் ஓமன், குவைத், சவுதி, கத்தார் இப்படி எதாவது ஒரு நாட்டின் விமான நிலையம் வந்து இறங்கி, அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அல்லது அதே விமானத்தில் அங்கிருந்து சென்னைக்கான விமானத்தில் வருவார்கள் இதுவே Transit எனப்படும்.
இப்படி வருகின்ற நபர்களுக்கு இந்த புதிய வகையான விசா பயன்படுத்தி சவுதியில் நுழைய முடியும். ஆமா கண்டிப்பாக நீங்கள் இன்னொரு நாட்டிற்க்கு செல்வதற்காக மற்றொரு விசாவை வைத்திருக்கின்ற நபராக இருக்க வேண்டும்.
மேலும் புரிதலுக்காக நீங்கள் இந்தியர் என்று வைத்து கொள்ளுங்கள் துபாயில் வேலைக்காக சென்று தங்கியுள்ள நபர் விடுமுறைக்காக தாயகம் வருகின்ற நேரத்தில் இந்திய புதிய விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து பிறகு இந்தியா கிளம்பலாம். இதுபோல் விடுமுறைக்காக இந்தியா வந்த நபர் என்று வைத்து கொள்ளுங்கள் நீங்கள் மீண்டும் துபாய்க்கு இந்தியாவில் இருந்து கிளம்பும் போதும் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதியில் நுழைந்து அங்கு தங்கியிருந்து மீண்டும் துபாய் புறப்பட்டு செல்ல முடியும்.
மாறாக எந்தவொரு நாட்டின் விசாவும் இல்லாத நபர் நீங்கள் என்றால் இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டவராக இருந்தாலும் சவுதி சென்று மீண்டும் தாய்நாடு திரும்ப முடியாது. ஆமா இந்த புதிய வகையான விசா உங்களுக்கு கிடைக்காது.
இல்லாமல் இந்தியா, இலங்கை உள்ளிட்ட எந்த நாட்டில் இருந்து இந்த புதிய வகையான விசாவுக்கு விண்ணப்பித்து சவுதிக்கு சென்று மீண்டும் உங்கள் நாட்டிற்கே திரும்புவது என்ற இருவழி பயணத்தை மேற்கொள்ள முடியாது. சுருக்கமாக சொன்னால் நீங்கள் இன்னொரு நாட்டின் விசா கைவசம் வைத்திருந்தால் இடையில் சவுதியில் இறங்கி 4 நாட்கள் அங்கு செலவிட்டு மீண்டும் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய இந்த LINK-ஐ CLICK செய்து 👉 Telegram ✔ குழுவில் இணையுங்கள்
Saudi Visa |
New Visa |
Transit Visa
Add your comments to Saudi News